SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவோர் எண்ணிக்கை குறைகிறது!

குடியுரிமைச் சோதனையில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் காரணமாக ஆண்டுதோறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20,000 இனால் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமைச் சோதனையில் ஆங்கிலத் தேவைகளை மேலும் அதிகமாக்க வேண்டுமென சிலர் கருதுகின்றனர்.

CC
Source: AAP

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

புதிய ஆஸ்திரேலியர்களுக்கான கடுமையான ஆங்கில பரீட்சையின் அறிமுகத்தின் பின்னணியில் சேவைத் துறையின்(service-based) அதிகரிப்பே என அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதாரமானது சேவை மற்றும் தகவல்தொடர்பு தொடர்பான பணிகள் சார்ந்து, அவற்றுக்கு ஏற்றாற் போல் வளைந்து செல்வதால் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான ஒரு ஆங்கில சோதனை தேவைப்படுகிறது என அரசின் பல்கலாசார விவகாரங்களுக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Office workers walk through central Brisbane, Wednesday, May 6, 2015. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING.
Office workers walk through central Brisbane, Wednesday, May 6, 2015. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING. Source: AAP

பல்கலாசார அமைச்சர் செனட்டர் Zed Seselja, குரோஷியவிலிருந்து   புலம்பெயர்ந்தோரின் மகனான அவர் கூறுகையில், அரசாங்கம்  ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான பல்கலாசாரக் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான பல வழிகளைக் கண்டுபிடிப்பதாக கூறியதுடன், தனது பெற்றோரின் வருகைக் காலத்தைவிட இப்போது ஆங்கிலம் மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.

"When some of my relatives arrived here in the 1950s and 1960s, we had the great wave of southern European migration and migration from other parts of the world, it was a very different environment when it came to, for instance, the workforce,” he said.

நீங்கள் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது உங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவே இருக்குமாயின் நீங்கள் நல்ல வேலைகளை பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். சுமார் 40 - 50 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை முற்றுமுழுதாக தற்போது மாறிவிட்டது. அந்தக் காலத்தில் குறைந்த ஆங்கில அறிவுடன் வந்தவர்களும் ஓரளவு சிறப்பான வேலைகளில் இணையக்கூடியதாக இருந்துள்ளது.

"There were more jobs that one could take on with limited English than is the case now".

பாராளுமன்றக் குழுவின் ஆராய்ச்சிகளின் படி, 1950களில் ஆஸ்திரேலிய தொழிலாளர்களில் ஏறத்தாழ அரைப்பகுதியினர் சேவை துறையில் (விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி, சுரங்க அல்லது உற்பத்தி தவிர) காணப்பட்டனர். ஆனால் இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. 21ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய தொழிலாளர்களில் முக்கால்வாசிப் பேர் சேவை துறையில் இணைந்துள்ளனர், அதேவேளை இந்த நிலைமை மேலும் அதிகரித்துச் செல்கிறது.

குடியுரிமைச் சோதனையில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள்  காரணமாக ஆண்டுதோறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20,000 இனால் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமைச் சோதனையில் ஆங்கிலத் தேவைகளை மேலும் அதிகமாக்க வேண்டுமென சிலர் கருதுகின்றனர்.

ஆனால் ஆங்கில மொழியில் திறமை, பரீட்சை இல்லாமலேயே ஆஸ்திரேலியாவின் பல்கலாசாரத் தன்மை மிக வெற்றிப் பாதையில் சென்றுள்ளதாகவும் அதனால் ஆங்கிலத் தேவையின் அவசியம் தற்போது தேவையேயில்லை என வாதிடுகிறார் Labor கட்சி Senator Murray Watt.

“Australia has been largely successful in the integration of people from all over the world,” he said. "That is while requiring a level of English that is lower than what is now being proposed. "

ஒரு பொதுவான மொழியில் உங்கள் சக குடிமக்களுடன் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம் மிக அவசியம் என வாதிடுகிறார் Senator Seselja.

"To the extent that we can encourage it, we will”

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now