ஆஸ்திரேலியாவில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 2007 ஆண்டு அளவு குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இன்னும் குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது பிரதமராக ஜான் ஹோவர்ட் இருந்தபோது – குறிப்பாக 2007 ஆண்டுபோன்ற எண்ணிக்கை அளவு கணிசமாக குறைக்கபட்டுள்ளது.
Queensland மாநிலத்தின் Longman தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் Peter Dutton குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெற்றிகரமாக குறைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். அதிக எண்ணிக்கையில் குடியேற்றவாசிகள் அனுமதிக்கபடுகின்றனர் என்று சமூகங்கள், மக்கள் வெளியிட்ட கவலையையடுத்து அரசு இப்படியான முடிவை எடுத்ததாக அமைச்சர் Peter Dutton கூறினார்.
நாட்டில் குடியேற விரும்பும் ஒருவர் அதற்காக விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ணப்ப பரிசீலனை முறைகளைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவோர் எண்ணிக்கை 21,000 குறைக்கப்பட்டு 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் என்று கடந்த ஆண்டு நிரந்தர வதிவிட விசா Permanent residency வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் என்று கடந்த ஆண்டு நிரந்தர வதிவிட விசா Permanent residency விசாக்களை அரசு வழங்கினாலும், இது அதிகமே என்றும், நிரந்தர வதிவிட விசா Permanent residency விசா என்பது ஒரு லட்சத்து பத்தாயிரமாக – அதாவது வழக்கமாக வழங்கப்பட்டுவந்த இரண்டு லட்சம் விசா – ஒரு லட்சமாக குறைக்கப்படவேண்டும் என்று முன்னாள் பிரதமர் Tony Abbott வலியுறுத்தினார்.
நிரந்தரமாக நாட்டில் வாழும் வகையில் தரப்படும் Permanent residency விசாக்களை அரசு குறைக்கும் அதே வேளையில் மேலும் மேலும் அதிகமாக தற்காலிக விசாக்களை அரசு வழங்கி குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றும் வெளிநாட்டு தொழிலார்களை அரசு அனுமதிக்கிறது என்று குற்றம் சாட்டினார் எதிர்கட்சித் தலைவர் Bill Shorten கூறினார்.
ஆனால் நிரந்தரமாக நாட்டில் வாழும் வகையில் தரப்படும் Permanent residency விசாக்களை அரசு குறைத்துள்ள நடவடிக்கையை Small Business Council of Australia விமர்சித்துள்ளது. வேலை செய்ய தொழிலாளர் பற்றாக்குறை இருக்கும் வேளையில் Permanent residency விசாக்களை அரசு குறைத்துள்ள நடவடிக்கை பொருளாதார வளர்ச்சிக்கும், சிறு வணிகத்திற்கும் உதவாது என்றும், சிறு வணிகம் துவங்கும் எண்ணிக்கையும் குறையும் என்றும் Small Business Council of Australia அமைப்பின் இயக்குனர் Peter Strong கவலை வெளியிட்டார்.
Permanent residency விசாக்களை அரசு குறைத்துள்ள நடவடிக்கை நகரங்களில் மட்டுமல்ல உள்ளூர் பகுதிகளான regional பகுதிகளை பெரிதும் பாதிக்கும் என்று Australian Chamber of Commerce and Industry அமைப்பின் இயக்குனர் James Pearson - SBS இடம் கூறினார்.
Permanent residency விசாக்களை அரசு குறைத்துள்ள நடவடிக்கை பற்றி The Federation of Ethnic Communities' Councils of Australia – FECCA கவலை வெளியிட்டுள்ளது. Permanent residency விசாக்களை அரசு குறைத்துள்ள நடவடிக்கையை உற்றுநோக்கினால் குடும்பங்களை வரவழைக்கும் பிரிவில்தான் அதிக எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாக FECCA அமைப்பின் இயக்குனர் Doctor Emma Campbell கூறினார்.
Permanent residency விசாக்களை அரசு குறைத்துள்ளபோதிலும், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், நாட்டில் சுமார் ஐந்து லட்சத்து பணிரண்டாயிரம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடந்த ஆண்டு நிரந்தர வதிவிட விசா Permanent residency பெற்றுள்ளார்கள்.
