ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான அடுத்த வருட தொழிற்பட்டியலுக்குரிய Medium & Long-Term Strategic Skills List (MLTSSL)இல் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்படாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் 2017-18ம் ஆண்டுக்கான புதிய தொழிற்பட்டியல் கடந்த ஜுலை 1 வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்பட்டியல் 6 மாதத்திற்கொரு தடவை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல் குறித்த கலந்துரையாடல்களை தொழிற்றுறை அமைச்சு மேற்கொண்டுள்ளபோதிலும், புதிய மாற்றங்கள் எதுவும் அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
2017-18 தொழிற்பட்டியலில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டதால், புதிய தொழிற்பட்டியலில் மாற்றங்களை அமுல்படுத்தாமலிருக்க குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த தொழிற்பட்டியலிலுள்ள அனைத்து வேலைகளும் புதிய பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017-18 தொழிற்பட்டியலை கீழ்க்காணும் இணைப்பில் பார்வையிடலாம்.
