SKIP TO MAIN CONTENT

‘ஆஸ்திரேலியாவில் காய்கறி உண்பவர்களுக்காக உயிர்துறக்கும் பிராணிகள்’

Fruits and vegies
Source: Flickr

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய விவசாயத்திற்கு ஊறு விளைவிக்காமல் தடுப்பதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பிராணிகள் கொல்லப்படுவதாக சத்துணவு மற்றும் விவசாய ஆராய்ச்சியாளர் Matthew Evans தெரிவித்துள்ளார்.

காய்கறி உற்பத்திக்காக கோடிக்கணக்கான பிராணிகள் கொல்லப்படுகின்றன என்றும் படுகொலை செய்யப்படுகின்ற இந்தப்பிராணிகள் உணவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்ற தகவலையும் எழுத்தாளர் மற்றும் விவசாய ஆராய்ச்சியாளர் Matthew Evans கூறியுள்ளார்.

இந்த தகவல் தொடர்பாக அவர் மேலும் கூறும்போது - ஆஸ்திரேலியாவின் நெல் உற்பத்தியை பாதுகாப்பதற்காக, வயல்களில் சேதம் விளைவிக்கும் 40 ஆயிரம் வாத்துக்கள் ஆண்டுதோறும் கொலைசெய்யப்படுகின்றன. மேற்கு ஆஸ்திரேலியாவில் மாத்திரம் கோதுமை உற்பத்திக்கு ஊறு விளைவிக்கும் ஒரு கோடி எலிகள் ஆண்டுதோறும் நஞ்சூட்டி படுகொலை செய்யப்படுகின்றன. பழத்தோட்டங்களில் வளரும் ஆப்பிள்கள் சேதப்படுத்தப்படுவதிலிருந்து தடுப்பதற்காக  ஆண்டுதோறும் 120 பொஸம்கள் கொல்லப்படுகின்றன - என்று தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now