ஆஸ்திரேலியாவில் கருக்கலைப்பு செய்துகொள்வோரின் வீதம் குறைவடைந்துள்ளதாக, ABC நடத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு வீதம் அதிகமுள்ள நாடாக ஆஸ்திரேலியா காணப்படுகிறதென பல்வேறு தரப்பினராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள போதிலும், இங்கிலாந்து மற்றும் மற்றும் கனடாவை விடவும், ஆஸ்திரேலியாவில் கருக்கலைப்பு வீதம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் சுகாதார மற்றும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான குழுக்களால் வெளியிடப்பட்ட 'Consensus statement' அறிக்கையின்படி, நாட்டில் வருடமொன்று 80 ஆயிரம் கருக்கலைப்புக்கள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இது கடந்த 2005ம் ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை எனவும், தற்போது ஆஸ்திரேலியாவின் கருக்கலைப்பு வீதம், ஆயிரம் பெண்களுக்கு 13.5 சதவீதம், அதாவது ஆண்டொன்றுக்கு 60 ஆயிரம் கருக்கலைப்புகள் நடைபெறுவதாக ABC ஆய்வு கூறுகின்றது.
கருத்தடை பற்றிய போதிய விழிப்புணர்வு, மற்றும் கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவிருத்தல், போன்ற காரணிகள் கருக்கலைப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காரணிகளாக சொல்லப்படுகின்றது.
