ஆஸ்திரேலியாவில் கடந்த நிதியாண்டில் 22 ஆண்கள் குழந்தைகளை பெற்றுள்ளனர் என்று ஆஸ்திரேலிய மனிதவளத்துறை அமைச்சு தரவுகள் தெரிவித்துள்ளன.
பெண்களாகப்பிறந்து பின்னர் ஆண்களாக மாறியவர்களே குழந்தைகளைப்பெற்றுள்ள அதேநேரம் Testosterone ஹார்மோன் எடுத்துக்கொள்ளும் இவ்வாறான ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்ற வரைமுறைகளை மீறி இவர்கள் வெற்றிகரமாக குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Transman-திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக BBC எடுத்துள்ள ‘Seahorse‘ ஆவணத்திரைப்படம் ஒன்று இம்முறை மெல்பேர்ன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்காக வழங்கிய தகவலில் ஆஸ்திரேலிய மனிதவளத்துறை அமைச்சு மேற்படி தகவலை குறிப்பிட்டுள்ளது.
கடந்த பத்து வருட காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் 228 ஆண்கள் இவ்வாறு கருத்தரித்தார்கள் என்றும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் 16 ஆண்டுகளாக இவ்வாறான ஒரு சம்பவம்கூட ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்படவில்லை என்றும் அமைச்சு தரவுகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
