1. கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 53.3 வீதமானவர்கள் ஆண்கள் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 46.7 வீதமாகக் காணப்படுகின்றது.

2. இவர்களில் பதிவுத் திருமணம் செய்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 38,449 ஆக காணப்படும் அதேநேரம் திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 18,507 ஆகும்.

3. தமிழ்மொழி பேசுபவர்களில் 74.8 வீதமானோர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். 9.6 வீதமானோர் கத்தோலிக்க மதத்தையும் 4.2 வீதமானோர் இஸ்லாமையும் பின்பற்றுகின்றனர்.

4. ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் பேசுபவர்களின் பெற்றோரில் 99 வீதமானவர்கள் வெளிநாட்டிலேயே பிறந்திருக்கின்றனர்.

5. தமிழ் பேசும் 73,161 பேரில் 42, 581 அதாவது 58.2 வீதமானவர்கள் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றிருக்கின்றனர்.

