ஆஸ்திரேலிய கல்வித்துறை வரலாற்றில் முதற்தடவையாக நேற்றைய தினம் மாணவர்கள் இலத்திரனியல் முறையில் தங்கள் பரீட்சையை நிறைவுசெய்துள்ளார்கள்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 1900 மாணவர்கள் தங்களது 12ம் வகுப்பு ஆங்கில இலக்கிய பரீட்சையை இலத்திரனியல் வழியில் மேற்கொண்டதன் மூலம் ஆஸ்திரேலிய கல்வித்துறை வரலாற்றில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
பரீட்சை எழுதிய அனைவரும் தங்களது ஆங்கில இலக்கிய பரீட்சைப்பத்திரத்தை கணினியிலேய எழுதினார்கள். கணினியில் இவர்களுக்கு இணைய வசதி மற்றும் சொற்களை சரி பார்க்கும் வசதிகள் ஆகியவை மறுக்கப்பட்டிருந்தன. பரீட்சையை முழுமையாகவே விசேட browser ஒன்றில் எழுதுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு கணினியிலும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த மாதிரியான பரீட்சை முறை, ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்களுக்கு பாதகமாக அமையும் போன்ற மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றபோதும் பாடசாலைகள் விரும்பினால் இவ்வகையான பரீட்சை வழிமுறைகளை பின்பற்றலாம் என்று ஆஸ்திரேலிய கல்வித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பரீட்சார்த்தத முயற்சி வெற்றியளித்துள்ளதால் இதேவழியில் மேலும் இரண்டு பாடங்களை இலத்திரனியல் பரீட்சைகளாக சேர்த்துக்கொள்ளப்போவதாக Adelaide High School தெரிவித்துள்ளது.
Share
