ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இடங்களில் மக்கள் அதிகம் விரும்பும் இடமாக Costcoதெரிவுசெய்யப்பட்டுள்ளது.
பொதுவாக Kmart, Target, Big W போன்ற நிறுவனங்களில் அனைத்துப் பொருட்களும் மலிவுவிலையில் கிடைப்பதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் அங்கு செல்வது வழக்கம்.
எனினும் Roy Morgan ஆய்வு நிறுவனம் ஜுலை மாதம் மேற்கொண்ட ஆய்வின்படி ஆஸ்திரேலியாவின் discount department store-களில் மக்கள் மனதில் அதிக இடம்பிடித்த நிறுவனமாக Costco காணப்படுகின்றது.
இரண்டாமிடத்தில் 88.5 புள்ளிகளுடன் Target காணப்படும் அதேநேரம் Kmart 88.4 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
இதேவேளை நான்காம் ஐந்தாம் இடங்களில் Big W மற்றும் Best & Less ஆகியன இடம்பிடித்துள்ளன.
குறித்த ஆய்வில் 50 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
