SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் பால்மாவு மறுக்கப்பட்டது Racism/இனவாதமா?

ஆஸ்திரேலியாவில் பால்மாவு மறுக்கப்பட்டது Racism/இனவாதமா?

Woolworths signage outside a store in Sydney, Friday, Aug. 28, 2015. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING
Woolworths signage outside a store in Sydney, Friday, Aug. 28, 2015. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலியாவில் பால்மாவு மறுக்கப்பட்டது Racism/இனவாதமா?

இணையத்தளம் வழியாக பால்மாவு வாங்க முனைந்த சீனத் தாய் ஒருவரை ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வர்த்தக நிறுவனமான Woolworths நிறுவனம் படாதபாடு படுத்தியுள்ளது. பால்மாவு வாங்குவதற்க்கு இணையத்தளம் வழியாக சீனத் தாய் Sarah Kong பணம் செலுத்தியிருந்தார். பால்மாவு  விற்பனை செய்யும் Woolworths  நிறுவனமும் அவரின் பதிவை ஏற்றுக்கொண்டு பால்மாவு எப்பொழுது அவரை வந்தடையும் என்று Woolworths மின்னஞ்சலும் அனுப்பி உறுதி செய்திருந்தது.

ஆஸ்திரேலியாவிலும், உலகெங்கிலும், குறிப்பாக சீனாவிலும் பால்மாவிற்குத் தட்டுப்பாடு நிலவும் பின்னணியில், ஒரே விண்ணப்பத்தில் நான்கு பால்மாகொள்கலன்களுக்கு Sarah Kong பதிவு செய்திருந்தார். பின்னர் குறுஞ்செய்தி மூலம் பால்மா எப்பொழுது அனுப்பிவைக்கப்படும் என்று, Woolworths நிறுவனமும் உறுதி செய்தது.  அந்தக் குறுஞ்செய்தி, "Woolworths delivery reminder. Your order will be delivered tomorrow 3/01/2016 between 6:00 AM and 9:00 AM"  என்று கூறியது. ஒன்பது மணிக்கு வரவேண்டிய பால்மா வரவில்லையே என்று அங்கலாய்த்த Sarah ஒன்பதரை மணிக்கு Woolworths நிறுவனத்தை தொடர்புகொண்டார். ஆனால் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாக Woolworths நிறுவன பிரதிநிதி பதில் கூறினார்.

சீனாவில் பால்மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதால், ஆஸ்திரேலியாவிலிருக்கும் பால்மாவை சீனாவுக்குத் தனிப்பட்ட முறையில், வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க பலர் அனுப்பி வைப்பதால் தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக Woolworths நிறுவனம் தனது செயலை நியாயப்படுத்துகிறது.

ஆனால் தனக்கு Woolworths நிறுவனம், இனப்பாகுபாடு காட்டியுள்ளதாகவும், அதற்காக Woolworths மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், Sarah Kong முகநூலில் வேண்டியுள்ளார். இது Woolworths நிறுவனம் காட்டும் இனவாதாம் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூற, இப்போது பால்மாவு வாதப் பிரதிவாதங்களை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now