SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் என்ன நடக்கும்?

WeChat
Source: WeChat

1 min read

Published

Updated


Skip to article content

சிட்னி Royal Botanic Gardensஇல் உள்ள மரம் ஒன்றின் மீது சிறுநீர் கழித்த இரு ஆண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

66 வயது மற்றும் 41 வயது சீன சுற்றுலாப்பயணிகளான இவர்களை காவல்துறையினர் கைது செய்வதற்காக நெருங்கியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இருவரும் அந்த இடத்திலிருந்து அகல முற்பட்டபோது இரு தரப்பினருக்குமிடையில் இழுபறி ஏற்பட்டது.

இதனால் 66 வயது நபருக்கு தோள் மற்றும் கால் பகுதியில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பொது இடத்தில் அநாகரிமாக நடந்து கொண்டமை மற்றும் காவல்துறையினருடன் எதிர்த்து நின்றமை உள்ளிட்ட காரணங்களுக்காக இவரை அடுத்த மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள அதேநேரம் 41 வயது நபருக்கு criminal infringement notice வழங்கப்பட்டுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now