SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் புதிய $2 நாணயம் வெளியீடு!

New Australian $2 coins.
The Royal Australian Mint has released a new $2 coin to mark the centenary of the end of WWI. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

முதலாவது உலகப்போர் நிறைவடைந்த நாளின் நூற்றாண்டு நினைவாகவும் போரில் பலியான ஆஸ்திரேலிய வீரர்களின் நினைவாகவும் Royal Australian Mint, புதிய இரண்டு டொலர் நாணயத்தை வெளியிட்டுள்ளது.

1918 ஆம் ஆண்டு முதலாவது உலகப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நேரம் மற்றும் நவம்பர் 11 திகதி ஆகியவற்றை நினைவு கூரும்வகையில் 11.11.11 என்று பொப்பிமலருடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நாணயம் இன்னும் சில வாரங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் பாவனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாணயங்களை நினைவுக்காகவும் பொக்கிஷங்களாகவும் சேகரிப்பவர்களுக்காக விசேட பதிப்புக்களையும் (special edition) உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வகையிலான, இரண்டு டொலர் நாணயத்தின் பெறுமதி 15 டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now