ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கையர்கள் நேற்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக Daily Mirror பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
படகுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவிற்குள் வர முற்பட்டவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4 பெண்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த 25 பேரும் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக Daily Mirror செய்தி கூறுகின்றது.
Share
