SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் தினமும் 52 பேர் இதயநோயால் மரணம்!

Heart patient
Greater "secondary prevention" could save more Australians from dying from heart disease. Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 51 பேர் இதயம் சம்பந்தப்பட்ட நோயால் மரணமடைகின்ற பின்னணியில் ஒருவர் தனது இதயம் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான Online Risk Calculator ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

National Heart Foundation of Australia-வினால் உருவாக்கப்பட்டுள்ள Risk Calculator  மூலம் 35-75 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் தனது வயதுக்கு ஏற்ப இதயம் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை கண்டறிந்து குடும்ப மருத்துவரின் உதவியை உரிய நேரத்தில் நாடமுடியும்.

குறிப்பாக National Heart Foundation of Australia இணையத்திற்குச் சென்று அங்குள்ள 'What's your heart age?' என்ற வினாக்கொத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உங்கள் இதயத்தின் வயது எத்தனை என்பதை கணக்கிட்டுக்கொள்ள முடியும்.

ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி தினமும் 21 ஆஸ்திரேலியர்கள் மாரடைப்பாலும் 22 பேர் Stroke எனப்படும் பக்கவாதத்தாலும் மரணமடைகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு மாத்திரம் சுமார் 19 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் இதயம் தொடர்பான நோய்களால் மரணமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஏனையவர்களை விடவும் பூர்வ குடி பின்னணி கொண்டவர்களை இதயநோய் அதிகம் தாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now