SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் #UsToo பிரச்சாரம்!

Catherine Marriott is to deliver a public address on sexual harassment.
Catherine Marriott is to deliver a public address on sexual harassment. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் முன்னாள் துணைப்பிரதமர் Barnaby Joyce அவர்கள் தனக்கெதிராக பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்த  மேற்கு ஆஸ்திரேலிய பெண் Catherine Marriott,  #UsToo என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் public ambassador-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய நஷனல் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான Barnaby Joyce அவர்கள் தனக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டார் என்று நஷனல் கட்சியின் உயர்பீடத்துக்கு கடிதம் மூலம் அறிவித்து தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று Catherine Marriott கோரியிருந்தார்.

அந்த கடிதம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கட்சியின் உயர்பீடம், அவரது குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிராகரித்துவிட்டது.

இதையடுத்து நஷனல் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் தலைமைப்பீடம்  இந்த விடயம் தொடர்பில் பொறுப்பற்றவிதமாக நடந்துகொண்டதாக Catherine Marriott தனது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளியிட்டிருந்தார்.  

இந்தப் பின்னணியில் மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற #UsToo விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய Catherine Marriott தனக்கு நடந்த சம்பவம் தொடர்பில் மேலதிகமாக பேசவிரும்பவில்லை என்றும், ஆனால் தன்னைப் போல பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட மற்றும் எதிர்கொள்ளும் பெண்களுக்காக குரல்கொடுக்கப்போவதாக தெரிவித்தார்.

பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் தீவரமடைந்துவரும் #MeToo பிரச்சாரம் தனிநபர் சார்ந்தது என்றும், #UsToo என்பது பலரையும் உள்ளடக்கிச் செயற்படும் நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now