SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களில் எந்த நாட்டில் பிறந்தவர்கள் அதிகம்?

Portrait of multi generation Indian family at home
Source: Getty

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் அதிகளவானோர் 30-39 வயதுக்குட்பட்டவர்களாவர்.

குறிப்பாக 35-39 வயதிற்குட்பட்ட 13.9 வீதமான ஆண்களும் 30-34 வயதிற்குட்பட்ட 13.7 வீதமான பெண்களும் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்.

ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களில் 67.8 வீதமானோர் தமது ஆங்கிலப்புலமை மிக நன்றாக இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தெரிவித்துள்ளனர்.

2016ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்ற தமிழ் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் 2012ம் ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

தமிழ்பேசும் 12.3 வீதமான ஆண்கள் வாரத்திற்கு 2000- 2999 டொலர்கள் வருமானமீட்டுவதாக தெரிவித்திருக்கும் நிலையில் 29.2 வீதமான பெண்கள் தமக்கு எவ்வித வருமானமும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 28,055 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். 27,352 பேர் இலங்கையில் பிறந்தவர்கள். 9,979 பேர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் ஆவர்.

இவர்களது கல்வியறிவு மட்டம் குறித்த தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now