Thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கம் ஆஸ்திரேலியாவில் எந்நேரமும் ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் வெப்பநிலையோடு காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவும் கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் அதிகரித்துவரும் சீரற்ற காலநிலையும் காற்றும் thunderstorm ஆஸ்துமா தாக்குதலை மீண்டும் ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதார சிக்கல்களும் அவற்றின் மீதான ஆராய்ச்சியும் என்ற தலைப்பில் காலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சுமார் இரண்டாயிரம் நோய்த்தாக்கங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணங்களினால் மூச்செடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குபவர்கள், ஆஸ்துமா நோயுள்ளவர்கள் ஆகியோர் இந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு எந்நேரமும் puffers போன்றவற்றை கையோடு வைத்திருக்கும்டி சுகாதர தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் இடம்பெற்ற Thunderstorm ஆஸ்துமா தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுமார் 1400 பேர் நாடெங்கிலுமுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டமையும் அவர்களில் மெல்பேர்னில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Share
