ஆஸ்திரேலியாவின் முன்னாள் துணைப்பிரதமர் Barnaby Joyce அவர்கள் தனக்கெதிராக மேற்கொண்ட பாலியல் முறைகேடு தொடர்பில் அவரது கட்சி உரியவகையில் விசாரித்து தனக்கு தீர்வு தரவில்லை என்பதால் தான் #UStoo என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக Barnaby Joyce அவர்களுக்கு எதிராக மேற்கு ஆஸ்திரேலிய பெண் Catherine Marriott குற்றச்சாட்டை முன்வைத்து அறிவித்துள்ளனார்.
ஆஸ்திரேலிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான Barnaby Joyce அவர்கள் தனக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டார் என்று தேசிய கட்சியின் உயர்பீடத்துக்கு கடிதம் மூலம் அறிவித்து தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று Catherine Marriott கோரியிருந்தார்.
அந்த கடிதம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கட்சியின் உயர்பீடம், அவரது குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிராகரித்துவிட்டது.
தேசியக்கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் தலைமைப்பீடம் பொறுப்பற்றவிதமாக நடந்துகொண்ட இந்த விடயம் தொடர்பில் தனது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளியிட்டுள்ள Catherine Marriott தான் #UStoo விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
