ஆஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களுடனும் ஒப்பிடும்போது, சிட்னியில் வாழ்பவர்களே தமது பணியிடங்களுக்குச் செல்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடுவதாக National Cities Performance Framework அறிக்கை சொல்கிறது.
மேலும் peak hour எனப்படும் வாகன நெருக்கடி மிகுந்த நேரத்தில், அதிக தாமதத்தை எதிர்கொள்பவர்களும் சிட்னிவாசிகளாவர்.
சிட்னியில் வாழ்பவர்களில் 58 வீதமானவர்கள் மாத்திரமே, தமது பணியிடங்களுக்கு 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் செல்லக்கூடிய நிலையில் உள்ளார்கள் என National Cities Performance Framework அறிக்கை சொல்கிறது.
இதேவேளை கன்பராவில் வாழ்பவர்களே மிகவும் குறைந்த நேரத்தில் தமது பணியிடங்களுக்கு பயணம் செய்யக்கூடிய நிலையில் உள்ள அதேநேரம் அங்கு வாழும் 99 வீதமானவர்கள் தத்தம் பணியிடங்களுக்கு அரை மணிநேரத்திற்குள்ளாக செல்கின்றனர்.
