ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் -முறைப்பாடு செய்தால் வெளியேற்றப்படுவார்களோ என்ற அச்சத்தில் தாம் தங்கியிருக்கும் வீடுகளில் காணப்படும் பாரதூரமான திருத்தவேலைகள் குறித்து எந்த முறைப்பாடும் செய்துகொள்வதில்லை என்று CHOICE அமைப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
51 வீதமானவர்கள் இவ்வாறான ஒரு நிலையில்தான் வாடகைவீடுகளில் வசித்துவருவதாக கூறுகிறார்கள்.
சுமார் 78 வீதமானவர்கள் தாங்கள் வாடகை வீட்டுக்கு குடியிருக்க சென்ற நாளிலிருந்து குளியலறை பிரச்சினையை எதிர்கொள்வதாக கூறுகிறார்கள்.
33 வீதமானவர்கள் கசிவுடன் கூடிய குடிநீர் குழாய்கள் தொடர்பாகவும் 22 வீதமானவர்கள் பழுதடைந்த மலசல கூடங்கள் தொடர்பாகவும் போராடிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துவதாக தெரிவித்துள்ளார்கள்.
சுமார் 28 வீதமானவர்கள் கரப்பான் பூச்சி - எறும்பு போன்றவற்றோடு போராடிக்கொண்டுதான் வாடகை வீட்டில் வசிப்பதாக கூறியுள்ளார்கள்.
இந்தப்பிரச்சினைகள் குறித்து முறையிட்டால் வாடகை அதிகரிக்கப்படுமோ என்று 68 வீதமானவர்கள் அஞ்சுகிறார்கள். 44 வீதமானவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.
இந்த கருத்துக்கணிப்பை நடத்திய CHOICE அமைப்பும் தேசிய வாடகை அமைப்புக்களின் சம்மேளனமும் இணைந்து குறிப்பிட்ட அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளன.
Share
