SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் விவாகரத்து வீதம் படு வீழ்ச்சி!

Sham marriage
Source: (Wu Jianxiong via Unsplash)

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் விவாகரத்து வீதம் கடந்த நாற்பது வருடங்களில் மிகக்குறைந்த எண்ணிக்கைக்கு சென்றிருக்கிறது என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய இணைகள் கூடியளவு ஒன்றாக வசித்து (live together), அதற்குப்பின்னரே திருமண வாழ்வுக்குள் நுழைகிறார்கள். ஆகவே, முன்புபோல அல்லாமல் விவாகரத்துக்கு செல்வதும் மிக்குறைவாக உள்ளது என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் 80 சதவீதமான ஆஸ்திரேலிய இணைகள் ஒன்றாக வசித்து பழகிய பின்னரே திருமண பந்தத்திற்குள் நுழைகிறார்கள் என்று அறியவந்துள்ளது. இதே வீதம், 1975-ஆம் ஆண்டு 16 வீதமாகவே இருந்துள்ளது.

திருமணக்கட்டமைப்பு இன்னமும் ஆஸ்திரேலியாவில் செழுமையாகவும் உறுதியாகவும் காணப்படுவதாகக்கூறும் புள்ளிவிபரவியல் திணைக்களம், ஒவ்வொரு நாளும் சராசரியாக 326 திருமணங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன என்றும் ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் அதிக திருமணங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now