ஆஸ்திரேலியாவின் தலைநகரான கன்பரா உள்ளிட்ட ACT பிராந்தியத்திற்கு வெளிநாட்டவர்களை உள்வாங்கும் Migration Program, ஆகஸ்ட் 23ம் திகதியுடன் நிறுத்தப்படுவதாக ACT பிராந்திய அரசு அறிவித்துள்ளது.
எனினும் உங்களது குடும்ப அங்கத்தவர்கள் எவரேனும் அங்கு இருந்தாலோ, அல்லது உண்மையிலேயே வேலைவாய்ப்பு ஏதேனும் இருந்தாலோ, வெளிநாட்டவர்கள் ACT-யில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல் ACT பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றவர்களும் தகுதிபெறும்பட்சத்தில் ACT nomination-க்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
இதுதவிர ஏற்கனவே ACT-யில் வாழ்ந்துவருபவர்கள் ACT nomination-க்கு ACT 190 nomination பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதேவேளை ஆகஸ்ட் 23ம் திகதிக்கு முன்னதாக ACT nomination-க்கு விண்ணப்பித்து அதற்கான பணத்தையும் கட்டியவர்களின் விண்ணப்பங்கள் இதனால் பாதிக்கப்படமாட்டாது.
ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் காலத்துக்குக்காலம் தமது குடிவரவு திட்டத்தை தேவைக்கேற்ப மாற்றியமைப்பதுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அதை நிறுத்தி வைப்பதுமுண்டு. அந்தவகையில் தற்போது ACT பிராந்தியத்தின் Migration Program நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவை ஏற்படும்போது திரும்ப அது திறக்கப்படுமெனவும், குடிவரவு முகவர் பீனா ஷா தெரிவித்துள்ளார்.
இச்செய்தி குறித்த மேலதிக விபரங்களுக்கு http://www.canberrayourfuture.com.au/
