நவுறுவில்,புகலிடக்கோரிக்கையாளர்களை காலவரையறையின்றித் தங்க வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையானது, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் செயல் என, Amnesty International குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International நேற்றிரவு வெளியிட்ட Island of Despair என்ற அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் நோக்கில் வந்தவர்களில் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்ட 750 பேர் நவுறுவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால் இவர்களுக்கான பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கப்படாததால் பல சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக Amnesty International சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் நவுறு தடுப்பு முகாம் நிலைமைகள் மோசமானதாக இருந்தாலும் தற்போது இருப்பதைவிட தாம் பாதுகாப்பாக உணர்ந்ததாக, நவுறுவில் குடியமர்த்தப்பட்டுள்ள அகதிகள் தம்மிடம் தெரிவித்ததாக இவ்வமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
எனினும் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ள பிரதமர் Malcolm Turnbull, நவுறுவில் குடியமர்த்தப்பட்டுள்ள அகதிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
