ஆஸ்திரேலியாவின் புதிய Governor-General ஆளுநர் நாயகமாக David Hurley இன்று கன்பராவில் பதவியேற்றார்.
கடந்த ஐந்து வருடங்களாக பதவி வகித்த Peter Cosgrove தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளியேறியதை அடுத்து புதிய Governor-General-ஆக David Hurley பதவியேற்றார்.
கடந்த ஐந்து வருடங்களாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்த David Hurley இந்த வருட இறுதியில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாற்பது வருடங்களாக ஆஸ்திரேலிய இராணுவத்தில் பணிபுரிந்த David Hurley கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் படைகளின் பிரதானியாக பதவி வகித்தவர் ஆவார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில ஆளுநராக David Hurley பதவி வகித்த காலப்பகுதியில் தனது கடைசி ஆஸ்திரேலிய தின உரையில் - பூர்வீக குடிகளின் உரிமைகள் குறித்துப்பேசியதுடன் தன்னை தனது இராணுவ பின்னணிக்கு அப்பால் பார்க்கும்படியும் கோரியிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் கடந்த நான்கு Governor-General-களில் மூவர் முன்னாள் இராணுவ அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
