தெற்கு ஆஸ்திரேலியாவையும் ஆஸ்திரேலியாவின் வட மாநிலத்தையும் (Northern Territory) இணைத்து ஒரு மாநிலமாக உருவாக்குவதற்கான கோரிக்கை இரண்டு மாநிலங்களின் அரசியல் தரப்புக்களிலிருந்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக உருவாக்கப்படுகின்ற இந்த இணைந்த மாநிலத்துக்கு Centralia என்று பெயரிடலாம் என்றும் யோசனை கூறப்பபட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு Northern Territory முதல்வர் முன்வைத்த இந்தக்கோரிக்கை மிக சுவாரஸ்யமாகவும் தீவிரமாகவும் விவாதிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், அரசியல் ரீதியாக இந்த யோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதபோது இரண்டு மாநில ஊடகங்களிலும் பல தரப்புக்களால் விவாதிக்கப்பட்டது. ஆசிரியர் தலைப்புக்கள் வெளியாகியிருந்தன. மாநிலங்களை இணைப்பதால் ஏற்படக்கூடிய சாதக - பாதங்கள் பற்றி பேசப்பட்டன. தற்போது மீண்டும் இந்த யோசனை முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டு மாநிலங்களினதும் இணைவு பொருளாதார ரீதியாக நாட்டுக்கு பயன் தரும் என்றும் பெருமளவான நிலப்பகுதி இணையும்போது மக்கள் பரம்பலுக்கும் இது வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் இணைவை வலியுறுத்தி Northern Territory முன்னாள் சட்ட மா அதிபர் John Elferink தெரிவித்துள்ள கருத்துக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் துணை பிரதமர் Tim Fischer உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
