SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் இரு நகரங்கள் உட்பட வாழ்வதற்கு மிக விலையுயர்ந்த 10 நகரங்கள்.

2018 இல் உலகளாவிய ரீதியில் சிட்னி இரண்டாவது மிக விலையுயர்ந்த நகரம் ஆகும். அப்படியாயின் அதி விலையுயர் நகரம் எது?

cc
Source: Vivel Asri

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

International Housing Affordability Survey மூலம் ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், அயர்லாந்து, ஜப்பான், நியூஸிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மொத்தமாக 293 பெரு நகரங்களின் வீட்டுச் சந்தைகளை பகுப்பாய்வு செய்த பின்னர், 2018இல் உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது Demographia எனும் அமைப்பு.

பட்டியலில், முதல் 10 இடங்களில் இரண்டு ஆஸ்திரேலிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஹாங்காங்கிற்குப் பிறகு சிட்னி இரண்டாவது மிக விலையுயர்ந்த நகரமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. மெல்போர்ன் 5வது இடத்திலுள்ளது.

cc
Source: Howarth Homes

A statement released by ‘Demographia’ states that a total of 92 major metropolitan markets (housing markets) --- with more than 1,000,000 population --- are included, including five megacities, which are defined as having more than 10,000,000 residents (Tokyo-Yokohama, New York, Osaka-Kobe-Kyoto, Los Angeles, and London).

ஒட்டுமொத்தமாக, சீனா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் வீட்டு விலைகளே தாக்குப்பிடிக்க முடியாத அளவு உச்சநிலையில் உள்ள 3 நாடுகளாகும்.

cc
Source: Demographia

இதேவேளை, மலிவாக வீடுகளை வாங்கக்கூடிய 10 நகரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை அனைத்துமே அமெரிக்காவிலேயே உள்ளன.

The statement reads, “There are ten affordable major housing markets, all in the United States. Rochester is the most affordable, with a Median Multiple of 2.5, followed by Cincinnati and Cleveland (2.7), Oklahoma City, Pittsburgh and Buffalo (2.8), St. Louis and Detroit (2.9) as well as Indianapolis and Grand Rapids (3.0).”

இதோ 2018இல் அதி விலை கூடிய நகரங்களின் பட்டியல்: Here is the list of the most expensive cities:

1. HongKong, China

2. Sydney, Australia

3. Vancouver, Canada

4. San Jose, US

5. Melbourne, Australia

6. Los Angeles, US

7. Honolulu, US

8. San Francisco, US

9. Auckland, New Zealand

10. London, UK


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now