SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் மிக ஆபத்தான வீதி எது தெரியுமா?

Public domain
Source: Public Domain

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

ஆஸ்திரேலியாவில் வீதிவிபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ள மிக ஆபத்தான வீதி மெல்பேர்ணிலுள்ள Springvale Road, Glen Waverley என பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI இன் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2015 - ஆகஸ்ட் 2016 க்கு இடையில், நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களை அடிப்படையாக வைத்து நாட்டின் மிக ஆபத்தான வீதிகளை AAMI பட்டியல்படுத்தியுள்ளது.

இதன்படி மெல்பேர்ணில் மட்டுமல்ல முழு ஆஸ்திரேலியாவிலேயே ஆபத்தான வீதியாக Springvale Road, Glen Waverley 4வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதுதவிர Plenty Road, Bundoora; Springvale Road, Springvale; Bell Street, Preston மற்றும் Princes Highway, Dandenong ஆகியனவும் மெல்பேர்ணில் உள்ள மிக ஆபத்தான வீதிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இதேவேளை AAMI-இன் அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் Territoryகளிலும் அதிக ஆபத்து உள்ள வீதி எது என்ற விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

AAMI
Source: AAMI


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now