SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த கட்டடம் மெல்பேர்னில் அமைக்கப்படுகிறது!

vic gov
Source: vic.gov.au

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த கட்டடம் விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்னில் அமைக்கப்படவுள்ளது.

Crown Melbourne-ஆல் அமைக்கப்படவுள்ள 90 மாடிகளைக் கொண்ட 6 நட்சத்திர அந்தஸ்து கொண்ட விடுதிக்கு விக்டோரியா அரசு அனுமதியளித்துள்ளதன் மூலம் இது சாத்தியமாகின்றது.

Southbank-இல் அமைக்கப்படவுள்ள இந்த விடுதி 323 மீட்டர் உயரம் கொண்டதாக அமையவுள்ளது.

தற்போது ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த கட்டடமாக உள்ளது குயின்ஸ்லாந்து, Surfers Paradise-இல் அமைந்துள்ள, 322.5 மீட்டர் உயரம் கொண்ட Q1 skyscraper  ஆகும். அதேநேரம் விக்டோரியாவின் மிக உயர்ந்த கட்டடம் 297 மீட்டர் உயரம் கொண்ட Eureka Tower ஆகும்.

1.75 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இப்புதிய நட்சத்திரவிடுதியின் கட்டுமானப்பணிகளில் 4000 பேர் ஈடுபடுத்தப்படுவர் என விக்டோரியா அரசு தெரிவித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now