SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த Pizza எங்கே கிடைக்கிறதென்று தெரியுமா?

Verace Pizza
Verace's Margherita pizza Source: Verace Macquarie Park

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

நீங்கள் பீட்ஸா பிரியரா? அப்படியென்றால் ஆஸ்திரேலியாவின் சிறந்த பீட்ஸா எங்கே கிடைக்கிறதென்று அறிந்துகொள்ள நிச்சயம் விரும்புவீர்கள்.

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பீட்ஸாவாக சிட்னியிலுள்ள Verace Pizzeria விருது பெற்றுள்ளது.

இத்தாலியில் நடைபெற்ற Campionato Mondiale della Pizza (Pizza World Championship)-இலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Neapolitan வகைக்குள் அடங்கும் Verace Pizzeria இதுவரை 16 முதல் பரிசுகளை ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டிகளில் வென்றுள்ளது.

இப்பீட்ஸா நிறுவனத்தை ஆரம்பித்தபோது ஆஸ்திரேலியாவின் சிறந்த பீட்ஸாவை தயாரிக்க வேண்டுமென்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும் அதன் பலனாக தொடர்ச்சியாக் கிடைத்துவரும் விருதுகள் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் இதன் உரிமையாளர் Stefano Cirene தெரிவித்துள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now