SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை துவங்கியது!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை துவங்கியது!

War Exercise
Source: ADF

2 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

"Tetta" எனும் நாட்டை அதன் அருகாமை நாடுகள் ஆக்கிரமித்துவிட்டன. அந்த "Tetta" நாட்டை எப்படி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா நாடுகள் இணைந்து எதிரிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது?

இப்படியான ஒரு கற்பனைச் சம்பவத்துடன் பெரும் போர் ஒத்திகைப் பயிற்சி தற்போது ஆஸ்திரேலியாவின் Queesnland மாநிலத்தின் Rockhampton அருகே Williamson Airfield பகுதியில் நடந்துகொண்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் நடைபெறும் மிகப் பெரிய போர் ஒத்திகை இது என்று வர்ணிக்கப்படும் இந்த பயிற்சியில் சுமார் முப்பதாயிரம் பாதுகாப்புப் படை வீர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய ராணுவ வீர்களின் எண்ணிக்கையே சுமார் முப்பதாயிரம்பேர்தான் என்ற பின்னணியில், இந்த போர் பயிற்சியில் சுமார் முப்பதாயிரம் வீரர்கள் பங்கேற்பது ஆஸ்திரேலிய ஒட்டுமொத்த ராணுவம் இந்த ஒத்திகையில் ஈடுப்படிருப்பதுபோன்று பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஆஸ்திரேலியா கடல்வழி தனது அதிக பட்ச ராணுவ வீரர்களை தரையிறக்கி பயிற்சி பெறுவது இதுவே முதன்முறையாகும்.  

Exercise Talisman Sabre 2017 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த போர் பயிற்சி ஒத்திகையை ஆஸ்திரேலியாவின் தலைமை ராணுவத் தளபதியோடு அமெரிக்க, நியூசிலாந்து, ஜப்பான் நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். அமெரிக்க-வடகொரிய போர் பதட்டம், சீன-அமெரிக்க முறுகல் நிலை என்ற உலக பாதுகாப்பு நடப்புகளில் நடந்துவரும் மாற்றங்களின் பின்னணியில், ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய போர் ஒத்திகை அதி முக்கியத்துவம் பெறுகிறது.                      

 

After 15 hours on a non-stop flight from Alaska, Australian commandos, US soldiers and Canadian infantry descend from the sky near Williamson Airfield outside Rockhampton. The mammoth US C17 Globemasters disgorge hundreds of troops over the next hour under the watchful eyes of Australia’s Chief of Army and high ranking US, New Zealand and Japanese officers. A few kilometres away, hundreds of Australian soldiers jump into the surf from amphibious landing crafts, as warships dot the horizon and fighter jets screech overhead. It’s Exercise Talisman Sabre 2017 and around 30,000 troops are in Queensland to fight a fictional enemy reflecting real world threats. Talisman Sabre revolves around a highly-scripted scenario. The country of "Tetta" has been invaded by its neighbours — the US and Australia are acting on a United Nations mandate to defend it.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now