SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Bob Hawke காலமானார்!

Former prime minister Bob Hawke died at his home in Sydney, aged 89.
Former prime minister Bob Hawke died at his home in Sydney, aged 89. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Bob Hawke தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார்.

ஆஸ்திரேலியாவின் 23வது  பிரதமரும் முன்னாள் லேபர் கட்சித் தலைவருமான இவர் தனது வீட்டில் மரணமடைந்ததாக அவரது மனைவி Blanche d'Alpuget தெரிவித்துள்ளார்.

இவரது மரணத்தைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bob Hawke ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பிரதமர்களில் ஒருவர் என பிரதமர் Scott Morrison புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா தனது விருப்பத்திற்குரிய மகனை இழந்துவிட்டது என லேபர் கட்சியின் தற்போதைய தலைவர் Bill Shorten தெரிவித்துள்ளார்.

1983 முதல் 1991 வரை ஆஸ்திரேலியாவின் பிரதமராகவிருந்த Bob Hawke அவர்கள் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த லேபர் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.

1929ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி தெற்கு ஆஸ்திரேலியாவின் Bordertown-இல் பிறந்த Bob Hawke அவர்கள் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்திலும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

1969 ஆம் ஆண்டு முதல் Australian Council of Trade Unions-ஐ தலைமையேற்று நடத்திய இவர் 1980 ஆம் ஆண்டு Wills தொகுதியில் வெற்றிபெற்று முதன்முறையாக நாடாளுமன்றம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bob Hawke அவர்களது இறுதி நிகழ்வுகள் அடுத்துவரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now