SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் முதலாவது கண்ணாடிப்பாலம் குயின்ஸ்லாந்தில் திறப்பு!

Cobbold Gorge
Source: ABC Far North

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவின் முதலாவது கண்ணாடிப்பாலம் கடந்தவாரம் குயின்ஸ்லாந்தில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

குயின்ஸ்லாந்தின் வட -மேற்கில் அமைந்துள்ள Gulf Savannah பிராந்தியத்தின் Cobbold Gorge என்ற சிறிய பள்ளத்தாக்கிற்கு மேல் இந்த கண்ணாடிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 9.5 மீற்றர் நீளமான இந்த சிறிய கண்ணாடிப்பாலம் குயின்ஸ்லாந்து அரசினால் சுமார் ஆறு லட்சம் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முற்றுமுழுதாக கண்ணாடியினால் அமைக்கப்பட்ட இந்த பாலத்துக்கு பயன்படுத்துப்பட்டுள்ள கண்ணாடியின் தடிப்பு 4.5 சென்றிமீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இரண்டு மீற்றர் அகலமானதாகும்.

இந்தப்பாலத்தை நிர்மாணித்த Hudson Fox கட்டுமான நிறுவனம் தனது அனுபவம் குறித்து கூறும்போதும் - குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள மிகச்சிறிய பள்ளத்தாக்கிற்கு மேலாகத்தான் இந்த பாலம் அமைக்கப்பட்டிருக்கிறதென்றாலும் இந்த பாலத்திற்கான கடைசிக்கட்ட - முக்கிய பணிகளை முடிப்பதற்கு மூன்று நாட்களானது என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொன்றும் 1.5 தொன் எடையுள்ள கண்ணாடிகளை ஹெலிக்கொப்டரில் கொண்டுவந்து பொருத்தவேண்டியிருந்தது என்றும் Hudson Fox கூறியது.

முடிவில்லாத நீச்சல் பிரதேசமாக இவ்வளவுகாலமும் பயன்படுத்தப்பட்டுவந்த இப்பிரதேசம் இனிவரும் காலங்களில் மாநிலத்தின் கவர்ச்சிமிக்க சுற்றுலா மையமாக மாற்றமடையும் என்று குயின்ஸ்லாந்து அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பு: மேலுள்ள படத்தை எடுத்தவர்கள் Tourism Events Queensland.  அதற்கு அவர்கள் இட்ட தலைப்பு, "Cobbald Gorge's first visitor was a little slippery, but seemingly not afraid of heights."


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now