SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் புகலிடம் கோருவோர் தொடர்பான கொள்கை மறுபரிசீலனை

Australia's asylum seeker policy 'controversial', changes will be considered: Malcolm Turnbull

Malcolm Turnbull
Source: AAP

2 min read

Published

Updated

By Raymond Selvaraj


Skip to article content

ஆஸ்திரேலியாவின் புகலிடம் கோருவோர் தொடர்பான கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும் – பிரதமர்

ஆஸ்திரேலியா கடைபிடித்துவரும் புகலிடம் கோருவோர் தொடர்பான கொள்கை சர்ச்சைக்குரிய மற்றும் சவாலான ஓன்று என்றும், மானஸ் தீவு, நௌரு தீவின் தடுப்பு முகாம்களில் புகலிடம் கோருவோர் தடுத்துவைக்க்பபட்டிருப்பது கவலை தரும் ஒன்றே என்றும் பிரதமர் Malcolm Turnbull கூறினார். தடுப்பு முகாம்களில் உள்ள புகலிடம் கோருவோர் சந்திக்கும் வேதனைகளைக் களைவது குறித்து அரசு பரிசீலனை செய்யும்  என்று Sky Newsக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் Turnbull கூறினார்.

ஆஸ்திரேலியாவின் வெளியே இருக்கும் தடுப்பு முகாம்களில் புகலிடம் கோருவோரின் மனுக்கள் பரீசலனை செய்யப்படுவதில் மாற்றம் கொண்டுவருவதானால் அதை முதலில் தமது அமைச்சரவையில் கலந்தாலோசித்த பின்னரே அது குறித்து முடிவு செய்யப்படும் என்று பிரதமர் Turnbull குறிப்பிடார்.    

முந்தைய பிரதமர் Tony Abbott  போலன்றி, பிரதமர் பதவி ஏற்று ஒன்பது நாட்களே ஆகியிருக்கும் நிலையில் புகலிடம் கோருவோர் குறித்து ஒரு மென்மையான தொனியை அவரது நேர்முகத்தில் அவதானிக்க முடிகிறது என்று செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

 

Prime Minister Malcolm Turnbull says he is concerned about asylum seekers languishing in Australian-run detention centres at Nauru and Manus Island and hinted the government may consider acting to relieve their plight. However Mr Turnbull said cabinet must be consulted before the government changes its policies on offshore processing, which he described as a controversial and challenging issue.

Speaking to Sky News on the ninth day of his prime-ministership, Mr Turnbull adopted a markedly softer tone on asylum seekers than that of his predecessor Tony Abbott, saying he understood the issues and all the government's existing policies were "on foot".


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now