SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகிறார் Scott Morrison!

Treasurer Scott Morrison arrives for the Liberal Party room meeting.
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக Treasurer-கருவூலக்காப்பாளர் Scott Morrison தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

இன்றையதினம் பரபரப்பாக  நடைபெற்றுமுடிந்த தலைமைத்துவ சவாலில் 45-40 என்ற வாக்குகள் அடிப்படையில் இவர் லிபரல் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் Peter Dutton-ஆல் விடுக்கப்பட்ட தலைமைத்துவ சவாலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கருவூலக்காப்பாளர் Scott Morrison, வெளிவிவகார அமைச்சர் Julie Bishop ஆகியோருக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது சுற்றுப்போட்டியில் Julie Bishop தோல்வியடைந்துவிட , Peter Dutton-Scott Morrison ஆகிய இருவருக்கிடையிலான இறுதிப்போட்டியில் Scott Morrison வெற்றிபெற்றிருக்கிறார்.

ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி இத்தலைமைத்துவ சவாலில் பிரதமர் Malcolm Turnbull பங்கேற்கவில்லை.

இன்றைய தலைமைத்துவ சவாலையடுத்து பிரதமர் பதவியை இழந்துள்ள Malcolm Turnbullஅவர்கள் நாடாளுமன்றில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது சிட்னி Wentworth தொகுதி ஆசனத்திற்கென இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்படவுள்ளது.  

இதேவேளை லிபரல் கட்சியின் தலைவராகவும் நாட்டின் 30வது பிரதமராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ள Scott Morrison கடந்த 2015 முதல் கருவூலக்காப்பாளராக கடமையாற்றியவர் ஆவார்.

லிபரல் கட்சியின் துணை தலைவராக Josh Frydenberg தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now