நீங்கள் ஒரு புகலிடக்கோரிக்கையாளராகவோ அல்லது வேறு ஏதாவது விசா ஒன்றின் மூலமாகவோ ஆஸ்திரேலியாவிற்குள் புதிதாக குடியேறியவரா? அப்படியென்றால் நீங்கள் இலவசமாக ஆங்கிலம் கற்கலாம்.
ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவின் கீழ் Adult Migrant English Program (AMEP)என்ற செயற்றிட்டத்தின் மூலம் நாட்டிற்குள் புதிதாக குடியேறிய அனைவருக்கும் 550 மணித்தியாலங்கள் இலவச ஆங்கில வகுப்பு நடத்தப்படுகிறது.
இதற்கு நீங்கள் தகுதியானவரா என்பது உள்ளிட்ட மேலதிக விபரங்களை தமிழ் மொழியில் அறிந்து கொள்ள http://www.education.gov.au/amep-information-other-languages என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள். அல்லது AMES Australia வை 13 26 37 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.