SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா வருகிறார் இந்திய ஜனாதிபதி!

Ram Nath Kovind
It is the first-time ever an Indian President is visiting Australia. Source: GettyImages/AFP PHOTO / PRAKASH SINGH

1 min read

Published

Updated

Presented by Renuka Thuraisingham


Skip to article content

இந்திய ஜனாதிபதி ராம் நாந் கோவிந்த் அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு வரவுள்ள இந்திய ஜனாதிபதி எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கும் 23 ஆம் திகதிகளுக்கு இடையில் சிட்னியிலும் மெல்பேர்னிலும் சில முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொள்வார் என்றும் இங்குள்ள புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினரை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையை வரவேற்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison இந்த விஜயத்தால் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இந்திய - ஆஸ்திரேலிய இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் இடம்பெறுகின்ற இதுபோன்ற விஜயங்களை எதிர்பார்த்திருப்பதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now