SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அரை மில்லியனாகிறது!

Indian tourists flocked to Australia
Indian tourist arrivals to Australia increase by 11% Source: SBS

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்வரும் 2025-இல் ஆண்டொன்றுக்கு அரை மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மார்ச் 2018 வரையான ஒரு ஆண்டு காலப்பகுதிக்குள் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளதாகவும் இது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 20 வீத வளர்ச்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்திய சுற்றுலாப்பயணிகள், online-இணையம் ஊடாக ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை கடந்த ஜுலை 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கு வருபவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு தரவுகளின்படி ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now