ஆஸ்திரேலியாவில் ஓய்வுபெறுபவதற்கான வயதெல்லையை 70 ஆக அதிகரிப்பது என்ற திட்டத்தைக் கைவிட உள்ளதாக பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய வயதெல்லையை 70 லிருந்து மீண்டும் 67 ஆக மாற்றுவதற்கு முடிவெடுக்கும் யோசனையை நாடாளுமன்றம் கூடும்போது அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்போவதாக பிரதமர் Morrison தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு லேபர் கட்சியின் ஆட்சியின்போது ஓய்வூதிய வயதெல்லை 65 லிருந்து 67 ஆக அதிகரிக்கப்பட்டது.
அதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு Tony Abbott பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருந்தார். அதன்பிரகாரம், 2025 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் ஓய்வூதிய வயதெல்லை 67லிருந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் 6 மாதங்களால் அதிகரிக்கப்பட்டு 2035 ஆம் ஆண்டுடன் 70 வயதாக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Tony Abbott-இன் ஆட்சிக்காலத்தில் மிகவும் விசித்திரமானதொரு மாற்றமாக இது விமர்சிக்கப்பட்டது. இதனை தற்போது மாற்றப்போவதாக பிரதமர் Scott Morrison அறிவித்திருக்கிறார்.
