SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்கள், துணைகளை எங்கிருந்து அழைத்து வருகிறார்கள்?

ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுத் துணைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

Happy young couple laughing, San Francisco
Happy young couple laughing in San Francisco by Golden Gate Bridge.

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

உங்கள் துணைவரையோ, துணைவியையோ நீங்கள் வாழும் நாட்டிற்கு அழைத்துவர, நீங்கள் என்ன விலை கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்? 

உலக நாடுகளில், ஆஸ்திரேலியர்கள் தான் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்கிறார்கள் என்ற போதிலும்,  ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள், வெளிநாடுகளிலிருந்து தம் துணைகளைத் தொடர்ந்தும்  அழைத்து வருகின்றனர்

50,000க்கும் அதிகமான துணைவர் வீசாக்களைக் குடிவரவுத்துறை கடந்த ஆண்டு வழங்கியுள்ளது.

எங்கிருந்து வருகிறார்கள்?
Source: SBS Life

குடிவரவுத்துறை வழங்கும் இப்படியான வீசாக்களின் உச்ச வரம்பு அது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் இந்தியா போன்ற உலகின் மிக அதிக மக்கள் தொகை வாழும் நாடுகளிலிருந்து தான் அதிகப்படியானவர்கள் வருகிறார்கள்.  அதற்கடுத்ததாக, அமெரிக்க மற்றும் பிரித்தானியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளிலிருந்தும் அதிகப்படியானவர்கள் வருகிறார்கள்.

இந்தப் பட்டியலில், முதல் பத்து நாடுகள்: சீனா, இந்தியா, இங்கிலாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் என குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நியூசிலாந்து நாட்டிலிருந்து வருமவர்களுக்கான வீசா முறைகள் வித்தியாசமானதால், அந்நாட்டிலிருந்து வருபவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

 

ஆஸ்திரேலியாவிற்குத் துணைவர் வீசாவுடன் வருவதற்கு, $6,865 கட்டவேண்டும்.  ஒருவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், கட்டிய பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.  இந்தத் தொகை, பிரித்தானியா அறவிடும் தொகையின் இரட்டிப்பு மடங்கு, மற்றும் அமெரிக்கா அறவிடும் தொகையின் மூன்று மடங்காகும்.

 

ஆஸ்திரேலியா அதிக பணம் அறவிடுவதற்குக் காரணம் இருக்கிறது என்று அண்மையில் குடிவரவு அமைச்சர் Peter Dutton கருத்து வெளியிட்டிருந்தார். 

இப்படி, துணைவர் வீசாவில் வருபவர்களுக்காக அரசு அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது என்று குடிவரவுத் துறை சொல்கிறது.  ஆனால், உண்மையில் ஆராய்ந்து பார்த்தால்,  இப்படித் துணைவர் வீசாவில் வருபவர்கள் அதிக வரி கட்டுவதால் அரசு அவரகளுக்குச் செலவு செய்வதைவிட, அதிகப்படியான பணத்தை இந்தத் துணைவர்கள் நாட்டுக்குப் பங்களிப்புச் செய்கிறார்கள் என்பதே உண்மையாகும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now