SKIP TO MAIN CONTENT

ஆஸி விமானநிலையங்களில் இன்று அறிமுகமாகும் புதிய சட்டம்!

Flickr
Source: Flickr

1 min read

Published

Updated

Presented by Renuka

Source: SBS Hindi


Skip to article content

ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரக்கூடிய பொருட்கள் தொடர்பான புதிய சட்டம் இன்று ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் ஆஸ்திரேலியாவின் சகல வெளிநாட்டு விமான நிலையங்களிலும் நடைமுறைக்கு வருகிறது.

இந்தப்புதிய சட்டத்தின் பிரகாரம், ஆஸ்திரேலியாவுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருபவர்கள் அல்லது பயணப்பத்திரத்தில் பிரகடனம் செய்யாது பொருட்களை கொண்டுவருபவர்கள் ஆகியோரது விஸாக்காலம் குறைக்கப்படவும் வேண்டுமானால் நிராகரிக்கப்படுவதற்கும் புதிய சட்டம் வாய்ப்பளிக்கிறது. ஆஸ்திரேலிய பிரஜைகளானால் அவர்களுக்கு எதிரான கடும் தண்டனைகள் நடைமுறைக்குவரவுள்ளன.

தண்டனைகள் நான்கு லட்சத்து 20 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் வரை அல்லது பத்து வருடங்கள் வரையிலான சிறை மற்றும் குற்றவாளியாக தீர்ப்பு போன்றவையாக கடுமையாக இருக்கும் என்று இன்று நடைமுறைக்கு வருகின்ற இந்த சட்டம் கூறுகிறது.

சட்டத்தை மீறும் குற்றவாளிகளாக இனங்காணப்படும் வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு மூன்று வருடங்களுக்கு தடைசெய்யும் அதிகாரமும் இப்புதிய சட்டத்திற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரக்கூடிய மற்றும் கொண்டுவரக்கூடாத பொருட்கள் மற்றும் விதிமுறைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள www.abf.gov.au என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now