SKIP TO MAIN CONTENT

Australian Open போட்டியில் வென்று பூர்வீக குடி பின்னணி கொண்ட Ash Barty வரலாற்றுச் சாதனை!

Ash Barty celebrates match point in her match against Danielle Collins.
Ash Barty celebrates championship point in her match against Danielle Collins. Source: Getty

2 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பூர்வீக குடிப் பின்னணி கொண்ட Ash Barty-க்கு நாடு முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

நேற்றையதினம் மெல்பனில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் Danielle Collins-ஐ 6-3 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், சுமார் 44 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைச் சுவீகரித்துக்கொள்ளும் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையை Ash Barty நிலைநாட்டினார்.

2019ல் பிரெஞ்ச் ஓபனையும் 2021ல் விம்பிள்டனையும் வென்று உலகளவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் இடத்திலுள்ள Ash Barty, 1978ல் பட்டம்வென்ற Chris O'Neil-க்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனை வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ash Barty-க்கு ஆஸ்திரேலிய அரசியல் பிரமுகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் டென்னிஸ் நட்சத்திரங்கள், நாட்டு மக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

Ash Barty-க்கான வெற்றிக் கிண்ணத்தை பூர்வீக குடிப் பின்னணிகொண்டவரும், முன்னாள் No.1 டென்னிஸ் வீராங்கனையுமான Evonne Goolagong Cawley வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now