SKIP TO MAIN CONTENT

மானுஸ் தீவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மரணம்

மானுஸ் தீவில் நேற்று இரவு புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதை மானுஸ் தீவு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Detainees in Manus Island
Source: SBS Tamil

1 min read

Published

Updated

Source: ABC Australia



Skip to article content
மானுஸ் தீவில் நேற்று இரவு புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதை மானுஸ் தீவு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இறந்த புகலிடக் கோரிக்கையாளர் இலங்கை பின்னணி கொண்ட 32 வயதான தமிழர்  என்றும் இடைக்கால ஏற்பாடாக தங்க வைக்கப்படும் transit centreல் இருந்த இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் Lorengauல் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும்   கூறப்படுகிறது. 
 
மானுஸ் தீவில் உள்ள குடிவரவு முகாம் அக்டோபர் 31ஆம் திகதி மூடப்பட உள்ளதால் புகலிடக் கோரிக்கையாளர்கள் transit centreக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  கடந்த இரண்டு மாதங்களில் அங்கு இடம்பெற்ற இரண்டாவது தற்கொலை இதுவாகும் .  கடந்த ஆகஸ்ட் மாதம் transit centreல் தங்கி இருந்த ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now