SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளில் மேலும் 34 பேர் விடுதலை!

Protesters are seen outside the Park Hotel in Carlton, Melbourne on 17 December, 2020.
Protesters are seen outside the Park Hotel in Carlton, Melbourne on 17 December, 2020. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

மருத்துவ சிகிச்சைக்காக நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு மெல்பேர்ன் ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளில் மேலும் 34 பேர் இன்று விடுவிக்கப்பபடுவதாக  Asylum Seeker Resource Centre தெரிவித்துள்ளது.

மெல்பேர்ன் Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் 26 பேர் bridging விசாக்கள் வழங்கப்பட்டு நேற்றையதினம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்குள்ள மேலும் 34 பேர் இன்று விடுவிக்கப்படுகின்றனர். 

இதுகுறித்த அறிவித்தல் குறித்த 34 பேருக்கும் இன்றையதினம் விடுக்கப்பட்டுள்ளதாக Asylum Seeker Resource Centre தெரிவித்துள்ளது.

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதை எளிதாக்கியிருந்த medevac சட்டம் தற்போது மீளப்பெறப்பட்டுள்ளபின்னணியில் இதன்கீழ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட பல அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹோட்டல்களில் நீண்ட நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பிரிஸ்பேர்னிலுள்ள கங்காரு பொயின்ட் ஹோட்டலிலும் ஏனையவர்கள் மெல்பேர்ன் ஹோட்டலிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது இவர்களில் பலர் கட்டம்கட்டமாக bridging விசாக்கள் வழங்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now