கடந்த வாரம் பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்ட ராகேஷ் குமார் ஷர்மா என்பவருக்கு அவரின்மேலான ஆட்கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
கடந்தவாரம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊடகவியலாளர்களாகக் கடமையாற்ற வந்திருக்கிறோம் என்று பொய் கூறிக் கொண்டு, பிரிஸ்பேர்ன் விமான நிலையத்தை வந்தடைந்த எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த ராகேஷ்குமார் ஷர்மா என்ற ஒன்பதாவது நபர் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியிருந்தார்.
இதேவேளை, 46 வயதான ராகேஷ்குமார் ஷர்மா, இந்தியாவின் இந்தி பத்திரிகை ஒன்றின் மூத்த ஊடகவியலாளர் என்றும் டெல்லியிலிருந்து 154km தொலைவிலுள்ள Kurukshetra என்னுமிடத்தைச் சேர்ந்தவரென்றும் குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ராகேஷ்குமார் ஷர்மா ஆஸ்திரேலியாவில் கைதான விடயம் உறவினர் ஒருவர் மூலமே அறிந்ததாக அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் Hindustan Times இற்குத் தெரிவித்துள்ளார்.
“I don’t know what happened in Australia. I came to know from my brother-in-law that he is in trouble there,” Mr Sharma’s wife Priyanka said.
தனது கணவருக்கு US உட்படப் பல நாடுகளுக்கு விசா இருப்பதாகவும் அவர் 5 நாட்கள் விஜயமாகவே ஆஸ்திரேலியா வந்ததாகவும் அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
“He had gone to Australia for five days. He has visas for several countries, including the US and Japan. But I don’t know what he does there,” she said.
ஷர்மாவுடன் கூடவந்த மற்றைய 8 பேரும் 17 தொடக்கம் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்களின் விசாக்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் CWG accreditation போலியானதாகும்.
According to the Australian Border Force, an Airline Liaison Officer (ALO) in Bangkok had alerted them about the group on transit through Thailand. The ABF said the group was questioned and found to have “fraudulent foreign media credentials”.
கடந்த வியாழக்கிழமை பிரிஸ்பேன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சர்மா மீது மோசடி குற்றம் மற்றும் அவருடன் பயணம் செய்த எட்டு ஆண்களின் சார்பாக தவறான அல்லது போலி ஆவணங்களை வழங்கியதான குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.
இந்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் வருகிற வெள்ளியன்று ஷர்மாவை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
