SKIP TO MAIN CONTENT

ஆட்கடத்தலை முறியடிக்க 8 கோடி டொலர்களை வழங்கியுள்ள ஆஸ்திரேலியா!

Image of Marise Paynes with other ASEAN ministers in Bangkok
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

தென்கிழக்கு ஆசியாவில் ஆட்கடத்தலை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா 8 கோடி டொலர்களை வழங்குவதாக ஆசியான் (ASEAN) மாநாட்டில் உறுதியளித்திருக்கிறது.

பாங்கொக்கில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne இந்த உறுதியை வழங்கியிருக்கிறார்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த நிதி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்வதற்கும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி நடவடிக்கை எடுப்பதற்குமான பொலீஸ் மற்றும் நீதித்துறைக்கு உதவும் வகையிலானது என்று கூறப்பட்டுள்ளது.

'ஆட்கடத்தலானது புதிய ஒழுங்கில் இடம்பெற்றுவருகின்ற அடிமைத்தொழிலாகும். அநாதரவான மக்களுக்கு ஆசை காண்பித்து அவர்களை ஆபத்தில் தள்ளுவதற்கு மேற்கொள்ளப்படுகின்றன முயற்சி. வயதுகுறைந்த பெண்களை திருமணம் செய்துவைப்பது முதற்கொண்டு பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான அகதிகளை அங்கிந்து மலேசியா மற்றும் இநதோனோஷியா ஊடாக பணத்துக்கு கடத்துவது என்று பல சட்டவிரோத காரியங்கள் தென்கிழக்கு ஆசியாவில் மலிந்துள்ளன. இவற்றை தடுப்பதும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தற்போதைய தேவையாக உள்ளது'- என்று ஆசியான் மாநாட்டில் ஆஸ்திரேலியா வலியுறுத்தியது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now