அதிர்ச்சியளிக்கும் மருத்துவச்செலவுகளிலிருந்து நோயாளிகளை காப்பாற்றும் விதமாக தங்களிடம் வருகின்ற நோயாளிகளுக்கு மருத்துவ செலவுகள் குறித்த பரந்துபட்ட தகவல்களை மருத்துவர்களே கூறும்வகையிலான புதிய நடைமுறை ஆஸ்திரேலியாவின் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தங்களது மருத்துவச்செலவுகள் குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் அறியாது, படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களை தாண்டிச்செல்லுகின்றபோது எதிர்பாராத பல செலவுகள் நோயாளிகளை சூழ்ந்துகொள்வது தற்போதுள்ள வைத்திய நடைமுறையில் காணப்படுகிறது.
இதனால், நிதி தொடர்பில் தயார்நிலையில் இல்லாத நோயாளிகள் பெருமளவிலான மருத்துவ செலவுகளுக்கு (out of pocket cost) ஆளாகிறார்கள்.
அண்மைக்காலமாக இது தொடர்பில பல சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன . இதனால், பல்லாயிரக்கணக்கான டொலர்களை நோயாளிகள் செலுத்தமுடியாமல், பொதுமக்கள் திரட்டிக்கொடுத்து மருத்துவ செலவுகளை நிவர்த்தி செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இவற்றிலிருந்து நோயாளிகளை காப்பாற்றும் விதமாகவும் அவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறித்த தெளிவான - முழுமையான - சரியான விவரங்களை சிகிச்சைக்கு முன்பாகவே வழங்குவதற்கும் Australian Medical Association (AMA) இந்தப்புதிய நடைமுறையை ஆரம்பித்துள்ளது.
இந்த நடைமுறையின் பிரகாரம், மருத்துவர்களிடம் நோயாளிகள் கேட்கும் கேள்விக்கொத்து பின்வருமாறு அமையவுள்ளது -
What are your fees? Are there any fees for other doctors? Will I have any out-of-pocket costs? Is your fee an estimate only? Can I have an estimate of your fees in writing? If the cost changes, when will you let me know? What if I need a prosthesis or implant? Should I contact my health fund?
