மெல்பேர்ன் மூதாட்டி ஒருவர் ஆறு வாரங்களில் இரண்டு அதிஷ்டலாபச்சீட்டுக்களில் வெற்றிபெற்றுள்ளார்.
மெல்பேர்ன் Eltham பிரதேசத்தை சேர்ந்த இந்த மூதாட்டிக்கு ஆறு வார இடைவெளியில் இரண்டு தடவைகள் இரண்டு லட்சம் டொலர்கள் அதிஷ்டலாபச்சீட்டின் மூலம் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
கடந்த தடவை வெற்றிபெற்ற பணத்தினை தனது மகளின் வீட்டுக்கு அருகில் வீடு வாங்குவதற்கு வைப்பிலிட்ட குறிப்பிட்ட மூதாட்டி, இந்த தடவை கிடைக்கப்பெற்ற பணத்தின் மூலம் தனது வீட்டு வங்கிக்கடனை செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.
இரண்டு தடவைகள் அடுத்தடுத்து தனக்கு வெற்றிப்பணம் கிடைத்திருப்பதானது உண்மையிலேயே அதிஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர் இணையத்தில் இந்த அதிஷ்டலாபச்சீட்டுக்களை வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
