SKIP TO MAIN CONTENT

அதிஷ்டலாபச் சீட்டிழுப்பின் மூலம் 758.7 மில்லியன் டொலர்களை வென்ற பெண்!

Mavis Wanczyk, of Chicopee, Mass., smiles during a news conference where she claimed the $758.7 million Powerball prize
Mavis Wanczyk, of Chicopee, Mass., smiles during a news conference where she claimed the $758.7 million Powerball prize Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

அமெரிக்காவின் Massachusetts-ஐச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவர், Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பின் மூலம் 758.7 மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் தனிநபர் ஒருவர் பெறும் ஆகக்கூடிய பரிசுத் தொகை இதுவாகும்.

Chicopee என்ற சிறுநகரிலுள்ள கடை ஒன்றுக்குச் சென்றபோது குறித்த Powerball அதிஷ்டலாபச்சீட்டை கொள்வனவு செய்திருந்ததாகவும், அதன் வெற்றியாளர் தான் என்பதை அறிந்தபோது தன்னால் இயங்கவே முடியாது போய்விட்டதாகவும், இரு பிள்ளைகளின் தாயான Mavis Wanczyk தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை ஒன்றில் கடந்த 32 வருடங்களாகப் பணிபுரிந்துவரும் Mavis Wanczyk, தனது வேலையை உடனடியாக ராஜினாமாச் செய்துவிட்டார்.

மாநில வரிகள் போக எஞ்சிய 480.5 மில்லியன் டொலர்களை ஒரேயடியாகவோ, அல்லது 30 வருடங்களுக்கு அத்தொகையைப் பகுதி பகுதியாகவோ இவர் பெற்றுக்கொள்ளலாம்.

எனினும் முதலில் சற்று ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் இப்பணத்தை என்ன செய்வது என்பது தொடர்பில் யோசிக்கவுள்ளதாக, Mavis Wanczyk பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now