SKIP TO MAIN CONTENT

"ஆட்டிறைச்சி" விநாயகர் விளம்பரம் தொடர்பில் இந்தியா முறைப்பாடு!

Ad
Source: (Youtube/We love our lamb)

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் ஆஸ்திரேலிய விளம்பரத்தில், இந்துக் கடவுட்களில் ஒருவராக வணங்கப்படும் விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில், இந்தியா சார்பில் உத்தியோகப்பூர்வமாக முறையிடப்பட்டுள்ளது.

Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் அமைந்த புதிய வீடியோ விளம்பரத்தில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுட்கள் மற்றும் இறைதூதர்களோடு விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக பல இந்து அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியில் இந்தியா சார்பில், கன்பராவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், ஆஸ்திரேலிய வெளிவிவகாரம் & வர்த்தகம், தொடர்பாடல் & கலை மற்றும் விவசாய அமைச்சுக்களிடம் உத்தியோகப்பூர்வ முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.

எனினும் மத இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவு Lamb என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவே தாம் அந்த விளம்பரத்தை அமைத்திருந்ததாகவும், எவரது மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கம் தமக்குக் கிடையாது என்றும் Meat and Livestock Australia நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த விளம்பரம் தொடர்பாக தமக்கு 50 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும், விளம்பரங்களை நெறிப்படுத்தும் The Advertising Standards Bureau கூறியுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now