SKIP TO MAIN CONTENT

அடுத்த ஆண்டு எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்!

Gas Shortage
Gobierno australiano informó que acelerará proyectos ligados al gas. Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

நாட்டில் அடுத்த வருடம் எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் 3 மடங்கு அதிகமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Australian Competition and Consumer Commission மற்றும் Australian Energy Market Operator ஆகிய இரு அமைப்புக்களின் அறிக்கையின்படி 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில், சுமார் 110 petajoules அளவு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதையடுத்து என்னென்ன வழிகள் மூலம் இத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யலாம் என்பது தொடர்பில், பிரதான எரிசக்தி நிறுவனங்களுடன் பிரதமர் Malcolm Turnbull பேச்சு நடத்திவருகிறார்.

அதேநேரம் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகளவு கட்டணம் செலுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாதெனத் தெரிவித்துள்ள பிரதமர், தேவையேற்படின் எரிவாயு ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசு உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ள லேபர் கட்சி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தியுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now